திண்டுக்கல், ஆக. 15: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் ராக்கி ஆகியோர்கள் கொண்ட குழு அதிரடியாக சோதனையிட்டனர். இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆட்டோக்கள் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் பகுதி, ரயில் நிலையத்திற்கு வந்த வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர ரயில் நிலையத்தில் உள்ள 8 நடைமேடைகள், நடைமேடை பாலம், லிப்ட்கள், குட்செட், தண்டவாளம், டிக்கெட் கவுண்டர்கள், பார்சல் ஆபீஸ் ஆகியவற்றிலும் சோதனை செய்தனர். மேலும் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை மேற்கொள்ளப்பட்டது.