தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நேற்று (2ம்தேதி) தொடங்கியது. இவ்விழா இன்று (3ம்தேதி), நாளை (4ம்தேதி) ஆகிய நாட்கள் நடக்கிறது. ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று (3ம்தேதி) ஆடி 18 விழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, ஆடி 18ம் நாளான இன்று (3ம்தேதி) தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.