கோவை, ஆக.3: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக உள்ளது.
அதனால், இன்று (சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு, பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.