ஈரோடு,ஜூன்2: ஈரோடு மா நகராட்சிப் பகுதிக்கு ஊராட்சிக் கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக் கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இன்றும் (2ம் தேதி), நாளையும் (3ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளன.
எனவே, ஈரோடு மா நகராட்சி, சூரியம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து எஃப்.எம் 1 மற்றும் 2 மெயின் வழியாக குடி நீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் குடி நீர் வி நியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் சீரான குடி நீர் விநியோகிக்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.