எப்படிச் செய்வது : பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும். பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக கிளறவும். இத்துடன் பொட்டுக்கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியை எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். மொறுமொறு இனிப்பு சீடை தயார்.
இனிப்பு சீடை
97
previous post