சேந்தமங்கலம், நவ.20: எருமப்பட்டி வட்டார காங்கிரஸ் சார்பில், பொன்னேரி கைகாட்டியில் நேற்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்து, இந்திரா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் வட்டார தலைவர் சுந்தரம், பேரூர் தலைவர் பெருமாள், நிர்வாகிகள் மோகன்தாஸ் செல்வகுமார், தமிழ்ச்செல்வன், அப்துல் சலீம், பெருமாள், ராஜேந்திரன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
0
previous post