கரூர்: கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் உப்பிடமங்களத்தில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாந்தோனி வட்டாரத் தலைவர் முருகேசன், உப்பிடமங்கலம் முன்னாள் நகரத் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சரவணன், ஆர்.டி.யை. மாநில பொதுச்செயலாளர் ஜி.பி.மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.