திருச்சி, ஆக.11: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதியுடையோர் வருகிற ஆக.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில், அக்னிபாத் திட்டத்தின்கீழ் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத, ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக ஆக.17 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 27.06.2003 முதல் 27.12.2006 வரையான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது மூன்றாண்டு பொறியியல் பட்டயப்படிப்பு (3 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியர்) முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாற வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோஅல்லது 0431-2413510, 9499055901 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.