கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதையின் இருபுறமும் உள்ள முழுமை பெறாத அணுகுசாலையை உடனே அமைக்க வேண்டும். மங்கள விநாயகர் கோயிலில் இருந்து மந்தித்தோப்பு வரையுள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர பொருளாளர் சீனிவாசன், நகர குழு கோமதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
0