திருவில்லிபுத்தூர், ஜூலை 31: ராஜபாளையத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 13வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் மற்றும் திருவல்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை பகுதி மற்றும் வன்னியம்பட்டி விஙக்கு பகுதியில் இருந்து பழைய ஆர்டிஓ அலுவலகம் வரை கட்சி கொடிகள் வைக்கப்பட்டு இருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இடையூறாக கட்சிக் கொடிகளை வைத்திருந்ததாக வன்னியம்பட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர்கள் மீதும், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.