இந்தியா: இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை இரண்டு அணி வீரர்களும் இன்று முதல் தொடங்குகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவசரமாக ஆஸ்திரேலியா திரும்பிய கேப்டன் கம்மின்ஸ் மீண்டும் இந்தியா திரும்பவில்லை இதனால் ஆஸ்திரேலியா அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார். இந்நிலையில் இந்தூர் டெஸ்டில் சாதிக்க கோலி மற்றும் ஜடேஜா தீவிர வலை பயிற்சியை நேற்றே தொடங்கிவிட்டது. இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அணி வீரர்களும் வலைப்பயிற்சியை தொடங்குகின்றனர். மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் எனவே இந்தூர் மைதானத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்ய இந்திய வீரர்கள் ஆயுத்தமாகி வருகின்றனர். அதே வேளையில் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதுடன் நடப்பு தொடரையும் மோசமாக இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணியினரும் தயாராகி வருகின்றனர். …