Tuesday, March 25, 2025
Home » இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா?!

இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்மெடிக்கல் ஷாப்பிங்மருத்துவ விழிப்புணர்வு அதிகரித்து வரும் இக்காலத்தில் வீட்டிலேயே உபயோகிக்கும் மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அல்லது விபத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கும் தொடர் சிகிச்சைக்காக சில அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொதுவாகவே வீட்டில் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் வாங்கி வைத்து உபயோகிக்க வேண்டும் என்பதை முதியோர் நல மருத்துவர் நடராஜன் இங்கே பட்டியலிடுகிறார்…தெர்மோமீட்டர் (Thermo meter)இது சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு அடிக்கடி டெம்பரேச்சர் சோதனை செய்ய வேண்டும். சுடுநீர் பேட் (Heating pad)வயதானவர்களுக்கு கை, கால்களில் வலி, வீக்கம் ஏற்படுவது சகஜமான ஒன்று. மேலும், குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ சுளுக்கு ஏற்பட்ட இடங்களில் இந்த ஹாட் வாட்டர் பேக்கில் சுடுநீரை நிரப்பி ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்துவிடும். காய்ச்சல் வந்த குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு டெம்பரேச்சர் அதிகமானால் இதே பேக்கில் ஐஸ்கட்டிகளை நிரப்பி ஒத்தடம் கொடுத்து காய்ச்சலை குறைக்கலாம்.முதல் உதவி பெட்டி (First Aid Box)சிறு குழந்தைகள் விளையாடும்போது அடிக்கடி விழுந்து உடலில் ரத்த காயம் ஏற்படும். முதியவர்களுக்கும் நிலைதடுமாறுவதால் காயங்கள் ஏற்படும். இதனால் வீடுகளில் பஞ்சு, டெட்டால், காயத்திற்கு போடும் துணி, கத்தரிக்கோல், பேண்ட் எய்ட், தீக்காயங்களுக்கு போடும் மருந்து போன்ற எல்லா உபகரணங்களும் கொண்ட முதல் உதவி பெட்டியை கண்ணிற்கு தென்படும் இடத்தில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.எடைபோடும் மிஷின் (Weight Machine)உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், எடை இழப்பு அல்லது அதிகரிப்பை தெரிந்துகொள்ள அடிக்கடி எடை பார்க்க வேண்டியிருப்பதால், ஒரு தரமான எடை போடும் மிஷினை வைத்துக் கொள்வது நல்லது. ஒருவரின் கொலஸ்ட்ரால் சதவீதம் மற்றும் உடல் எடை குறியீட்டெண் (BMI) கண்டுபிடிக்க உதவுகிற பல அம்சங்களைக் கொண்ட எடை மிஷின்கள் இருக்கின்றன.குளுக்கோ மீட்டர் (Glucometer)நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை ரெகுலராக கண்காணிக்க குளுக்கோ மீட்டர் ஒன்றை வீட்டில் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று சர்க்கரை அதிகமாகிவிடும் அல்லது குறைந்துவிடும். இவர்கள் அவ்வப்போது அந்த முடிவுகளை ஒரு டைரியில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதன் மூலம், மருத்துவர் அதற்கேற்றவாறு மருந்துகளை பரிந்துரைக்க வசதியாக இருக்கும். குறிப்பாக, இன்சுலின் ஊசியை சார்ந்திருப்பவர்களுக்கு, அளவுகளை பதிவு செய்து வைத்துக்கொள்ள இந்த குளுக்கோ மீட்டர் அவசியம். பிபி மானிட்டர் (BP Monitor)ரத்த அழுத்தத்தை அளவிட பயன்படும் பிபி மானிட்டர் ஒன்றை வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த ரத்த அழுத்தம் அல்லது உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டு நிலையுமே சில நேரங்களில் மோசமான சந்தர்ப்பங்களை உருவாக்கிவிடும். இப்போது நடுத்தர வயதினருக்கே ரத்த அழுத்த பிரச்னை இருப்பதால், பி.பி மானிட்டர் ஒன்று அனைத்து வீடுகளிலுமே இருக்கலாம். ;இன்ஹேலர்ஸ், நெபுலைசர் (Inhaler Nebulizer)வீசிங், ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இன்ஹேலரை எப்போதும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், ஒன்று தீருவதற்கு முன்பாகவே இன்னொன்று வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே சுவாசக்கோளாறு உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நெபுலைசர் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அதற்குத் தேவையான மருந்துகள், உபகரணங்களையும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் கடுமையான நுரையீரல் செயலிழப்பு இருக்கும் நோயாளிகள் உள்ள வீடுகளில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் அல்லது போர்ட்டபிள் ஆக்சிஜன் அப்பேரட்டஸ் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சு நின்றுவிடும் அபாயம் இருப்பதால், எப்போதும் ஒரு போர்ட்டபிள் ஆக்சிஜன் சிலிண்டரை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். CPAP (Continuous Positive Airway Pressure)Obstructive Sleep Apnea என்று சொல்லப்படும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னை சிலருக்கு இருக்கும். உடல்பருமனாக இருப்பவர்கள் குறட்டை விடுவார்கள். நல்ல உறக்கத்தில் குறட்டை விடுவதாக நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு நாக்கு, தொண்டையைச் சுற்றியுள்ள தசைகளில் தளர்வு ஏற்பட்டு, அங்குள்ள திசுக்கள் தூங்கும்போது நுரையீரலுக்கு காற்றோட்டம் செல்வதை தடுப்பதால் குறட்டை வந்து அதுவே மூச்சுத்திணறலாக மாறும். தூங்கும்போது இந்த CPAP கருவியை பொருத்திக் கொள்வதன் மூலம் தொண்டைக்கும், நாக்கிற்கும்; இடையிலுள்ள அடைப்புகளை நீக்கி, நுரையீரலுக்கு தடையில்லாத ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. குறட்டை விடுவதும் நின்றுவிடும். குறட்டை, Sleep Apnea பிரச்னை இருப்பவர்களின் வீட்டில் கட்டாயம் CPAP கருவி இருக்க வேண்டும்.நகர்வதற்கான உபகரணங்கள் (Mobility Instruments)முதியவர்களுக்கு தேவையான வாக்கிங் ஃப்ரேம், விபத்தில் அடிபட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் வீடுகளில் அவர்கள் எளிதில் உபயோகிப்பதற்கு ஏற்றவாறு வாக்கிங் ஊன்றுகோல், வீல் சேர், போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் பாத்ரூம், அறைகளின் தரை சொர, சொரப்பாக வைத்திருப்பது நல்லது. இப்போது முதியவர்கள் வசதியாக பயன்படுத்தும் வகையில் பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் நிறைய வந்துவிட்டது. ;– உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

nineteen + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi