பெரம்பலூர்,மே.15: பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவியர் தங்கள் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்-பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் தகவல். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : கடந்த 8ம்தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து www.dge.tn.gov.in < http://www.dge.tn.gov.in/ > என்கிற இணையதள முகவரியில் இருந்து, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப் பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) டவுன்லோட் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை இட்டு மாணவர்களுக்கு வழங்கலாம், அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விபரங்களை அளித்து, www.dge.tn.gov.in < http://www.dge.tn.gov.in/ > என்ற இணையதளத்தில் தாங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தனித்தேவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விபரங்களை அளித்து www.dge.tn.gov.in < http://www.dge.tn.gov.in/ > என்ற இணையதளத்தில் உரிய மதிப்பெண் பட்டியலை தாங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.