நீடாமங்கலம், ஜூலை 5: நீடாமங்கலம் அருகே சித்தாம்பூர் அரிச்சபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை.நீடாமங்கலம் ஒன்றியம் சித்தாம்பூர் – அரிச்சபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக கப்பிகள் பெயர்ந்து பல ஆண்டுகளாக உள்ளது. இந்த சாலையில் வழியாக மேலாளவந்தச்சேரி, கீழாள வந்துச்சேரி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், வேட்டைத்திடையில் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த சாலையின் வழியாக லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் பள்ளி கல்லூரி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர் .
இரவு நேரமாகிவிட்டால் மின்விளக்கு இருப்பதில்லை எனவே அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் வாகனங்கள் பஞ்சர் ஆகிவிட்டால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் நடந்து வரும் பொழுது கப்பிகள் காலில் குத்தி கீழே விழுந்து இரத்த காயங்களுடன் செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் சென்று பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.