கரூர், ஜூன் 23: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முகாமில் உரிமைதாரர்கள் தங்களின் நில உரிமை தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளுக்காக, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்துதலில். நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் – 2013. (மத்திய சட்டம் 30/2013) மற்றும் 2017 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமை விதிகளின் கீழ் நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட சட்டப் பிரிவு 23-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கப்பட்ட இனங்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்குவது தொடர்பாக நில உரிமைதாரர்களுக்கு கீழ்காணுமாறு கிராம வாரியான ஒருங்கிணைப்பு முகாம் நடத்தி தீர்வு செய்யப்படவுள்ளது. எனவே, கீழ்காணும் கிராமங்களில் இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்ட இனங்களின் நில உரிமைதாரர்கள் காலை 10.00 மனி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்களது நில உரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினை பெற்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் வருமாறு:
24.06.2025 (செவ்வாய்க்கிழமை):
மகாதானபுரம் தெற்கு சமுதாயகூடம், பழைய ஜெயங்கொண்டம்,மகாதானபுரம் தெற்கு கிராமம் சிந்தலவாடி, பிள்ளாபாளையம், தளிஞ்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், தளிஞ்சி. நங்கவரம் தெற்கு -1, வைகநல்லூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், வைகநல்லூர் தெற்கு,நெய்தலூர் தெற்கு. 25.06.2025 (புதன்கிழமை): சமுதாய கூடம் கோட்டை மேடு, நெய்தலூர் ( மாரியம்மன் கோயில் அருகில்). சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், சத்தியமங்கலம். கிருஷ்ணராயபுரம் தெற்கு தனி வட்டாட்சியர் (நி.எ) அலகு-1 அலுவலகம், கிருஷ்ணராயபுரம். ராச்சாண்டார் திருமலை சமுதாய கூடம், ராச்சாண்டார் திருமலை 26.06.2025 (வியாழக்கிழமை): மருதூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், இரணியமங்கலம் கிராமம். இரணியமங்கலம் கருப்பத்தூர் தாய் சேய் நல விடுதி,மேலதாளியாம்பட்டி,கருப்பத்தூர் கிராமம். 27.06.2025 (வெள்ளிக்கிழமை): கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், இனுங்கூர்.