அறந்தாங்கி, ஆக.18: அறந்தாங்கி அருகே இடையங்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவின் 11ம் நாள் திருவிழாவினை ஆதிதிராவிடர்கள் கொண்டாடி அம்மனை வழிபட்டனர்.
அறந்தாங்கி அருகே இடையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந் திருவிழா நடைபெறும் நடப்பாண்டு ஆடிப் பெருந்திருவிழா கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் மண்டகபடிதார்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் 1-ம் நாள் திருவிழா நீதிமன்ற உத்தரவுபடி அறந்தாங்கி வட்டாச்சியர் மேற்பார்வையில் அப்பகுதி ஆதிதிராவிடர்கள் திருவிழாவை கொண்டாடி அம்மனை வழிபட்டு சென்றனர்.