இடைப்பாடி, ஜூன் 11: இடைப்பாடி அருகே வெள்ளாண்டிவலசில், சேலம் தெற்கு மாவட்ட பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துசாமி, இடைப்பாடி நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, குமாரசாமி, ராமர், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் அருண்குமார், இளைஞர் சங்கத் தலைவர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், ரவி, குணசேகரன், பூபதி, வேலுமணி, நகரத் தலைவர்கள் துரைசாமி, பாலசுந்தரம், நகர பொருளாளர் செல்வி கணேசன், சித்தன், மாணிக்கம், குமரேசன், வைத்தி, தனபால், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாற்றுக் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.
இடைப்பாடியில் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்
0
previous post