தொண்டி, ஜூன் 5: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெளியில் செல்வோர் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டனர். அதனால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென கடும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடும் வெப்பத்தால் தவித்து வந்த மக்கள், இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவத் தொடங்கியது. கால்நடைகளுக்கு தேவையான புல்லும் முளைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இடி மின்னலுடன் கனமழை
0