பெரணமல்லூர், பிப்.24: இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று நடந்த திருப்பாவாடை அன்னக்கூட உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் சுவாதி நட்சத்திர வழிபாடு மற்றும் கோ பூஜை நடந்து வருகிறது. மேலும், மாசி மாதத்தில் திருப்பாவாடை அன்னக்கூட உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. அதன்படி, மாசி மாதம் முன்னிட்டு திருப்பாவாடை அன்னகூட உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் உற்சவமூர்த்தி தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.