சிதம்பரம், செப். 2: சிதம்பரத்தில் இசை கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சிதம்பரம் வெள்ளைபிறந்தான் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் வெண்ணிலா(21). இவர் முத்தையா நகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, அண்ணாமலை பல்கலைக்கழக இசை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வெண்ணிலாவின் உறவினர் விக்னேஷ், இசை கல்லூரியில் படித்து வரும் வெண்ணிலாவை பார்ப்பதற்கா சென்றுள்ளார். அப்போது அவர் தங்கி இருந்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வெண்ணிலா அங்கு உள்ள மின்விசிறியில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெண்ணிலாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெண்ணிலா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.