தா.பழூர், ஆக. 27:ஆவணி மூலத்தையொட்டி தா.பழூர் விஸ்வநாதர் சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் கோயிலில் ஆவணி மூலத்தையெட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. முன்னாதாக சந்திரசேகர் மற்றும் சந்திரமௌலி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.இதில் சுவாமி அம்பாளுக்கு பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, சந்தனம், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலையில் வண்ண மலர் அலங்காரத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சப்பரத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தமிழ் தேவார திருமுறைகள் இசைக்கப்பட்டு மேளதாளத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.