ஆவடி, நவ. 28: ஆவடி காவல் ஆணையரகத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலைய மது விலக்கு வழக்கில் 35 இருசக்கர வாகனம், 5 மூன்று சக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள், அரசாணை 41ன் படி அடுத்த மாதம் 12ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் கேட்க வருபவர்கள், இருசக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு 2000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5000 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் விற்பனை வரியை உடனடியாக செலுத்த வேண்டும். ஏலத்தில் பங்கெடுத்துவிட்டு ஏலம் எடுக்கதாவர் களின் வைப்புத் தொகையை முழமை யாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள சான்று கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
0