உடுமலை, ஜூலை18: உடுமலை சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில், திருப்பணி மேற்கொள்ள பாலாயம் நிகழ்சி நேற்று நடந்தது. உடுமலை அருகே, சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமான மாலக்கோவில் உள்ளது. இக்கோயிலிலில் ஆண்டு தோறும் தை முதல் நாள் முதல், மாட்டுப்பொங்கல் வரை, மூன்று நாட்கள் தமிழர் திருநாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், கால்நடைகளிலிருந்து கறந்த பாலை கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதோடு,கால்நடை வளம் பெருகவும்,நோய், நொடி நீங்க உருவார பொம்மைகளை காணிக்கை செலுத்துவதையும், தை முதல் நாள் பிறக்கும் கன்றுகளை சுவாமிக்கு வழங்குவதையும் நூறாண்டு கால பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர்.
தற்போது, இக்கோவிலில், உள் பிரகாரம் முழுவதும் கருங்கற்கள் தளம் அமைத்தல், மூலவர் கோபுரம் பஞ்ச வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான, பாலாலயம் செய்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. தென்சேரிமலை திருநாவுக்கரசர் நந்தவனத் திருமடம், தவத்திரு முத்து சிவராம சாமி அடிகளார் முன்னிலையில் பாலாலயம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் செயல் அலுவலர் ராமசாமி, உபரதாரர் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி,குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ச.ராஜமாணிக்கம்,சியாம் பிரசாத்,பர்வதவர்த்தினி முருகேசன் குணசேகர்,ரகுபதி செல்வராஜ், சின்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாபு (எ) பத்மநாபன், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் விமலாசௌந்தரராஜன், தங்கவேல், அற்புதராஜ், வெங்கடேஷ், வெங்கிடுபதி, வீராசாமி, பழனிச்சாமி, ரகுபதி, ராஜேந்திரன், சுப்பிரமணியம் கார்த்திகேயன், குருசாமி, ஜெயப்பிரகாஷ்,உமா மகேஸ்வரி, லட்சுமி, சுப்பிரமணியம், உதயகுமார், சதீஷ்குமார் முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.