திருவில்லிபுத்தூர், செப். 4: திருவில்லிபுத்தூரில் ஆட்டோ-டாக்ஸி வேன் டிரைவர்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் நகர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் பிரவீன், தர்மராஜ், 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து, டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.