பொன்னமராவதி, செப்.3: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை அமைச்சர் ரகுபதி பாராட்டினார்.
பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி குறுவட்ட போட்டிகள் மாவட்டப்போட்டிகள் மற்றும் மாநில போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம், ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி, அழகப்பன் அம்பலம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலெட்சுமிஅழகப்பன், ஊராட்சித் தலைவர் சந்திரா சக்திவேல், செயற்குழுஉறுப்பினர் ஜெயராமன், நகரச் செயலாளர் அழகப்பன், தலைமையாசிரியர் நாச்சம்மை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சாந்தி, விஏஓக்கள் பாண்டியன், சௌந்தரபாண்டியன், ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் குமார், சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் ஆலவயல் முரளிசுப்பையா, சாமிநாதன், அன்னராசு,இளங்கோ வார்டுஉறுப்பினர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.