பொன்னமராவதி, ஜூன் 26: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 245 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் சமுதாயக்கூடத்தில் பொன்னமராவதி வட்டார களஞ்சியம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் 245 பேரூக்கு கண் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 68 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 49 பேரூக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டன. 23 நபர்கள் கண் மருத்துவமனைக்கு மேல் சிகிக்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மதுரை கிராமபுற மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சந்திராசக்திவேல், முருகேசன், விவேகானந்தா தாய் தமிழ் பள்ளி தாளாளர் மாதவன், வட்டார தலைவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.