பாடாலூர், நவ.19: ஆலத்தூர் தாலுகா அருணகிரிமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அருணகிரிமங்கலம் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கூத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார், கால்நடை ஆய்வாளர்கள் வசந்தா, பிரபு மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் முகாமிற்கு வந்த 700 மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில் அருணகிரிமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டனர். மேலும் 800 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.