பாடாலூர், ஆக. 29: அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசின் நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும் மற்றும் பெரம்பலூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் வருகை தந்த தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆலத்தூர் தாலுகா அடுத்த குன்னம் பேருந்து நிலையத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். நேற்று மதியம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை தொடர்ந்து சாலை மார்க்கமாக வந்த அமைச்சருக்கு ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம், சடைக்கம்பட்டி, அழகிரிபாளையம், மேலமாத்தூர் என வழிநெடுகிலும் பொதுமக்கள் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குன்னத்திற்கு காரில் வந்தபோது காரில் இருந்து இறங்கி நின்ற அமைச்சரை கழக தொண்டர்கள், பெண்கள், முதியவர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். இதனை மகிழ்ச்சியுடன் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரராசு, ரமேஷ், கார்மேகம், மாவட்டத் துணை அமைப்பாளர் சுப்ரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துகண்ணு, சாமிதுரை, ராமசாமி, சுமதி கென்னடி, ராஜேந்திரன், இளவரசு, அன்புச்செல்வன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் குமார், மதியழகன், தனவேல், கிளைச் செயலாளர்கள் நாராயணசாமி, சுந்தரம், கோபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராகவன், அகிலாராமசாமி, பாலமுருகன், ராஜேஷ் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வரவே்ற்பு] ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.