பாடாலூர், ஜூன் 11: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளில் ரூ.15.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி புதிய பணிகளை திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி, மாக்காய்குளம், ஜெமீன்பேரையூர், இலுப்பைக்குடி, சாத்தனூர் குடிக்காடு, குரும்பாபாளையம், கொட்டரை, ஆதனூர், மேலமாத்தூர், மருதையான் கோவில், கீழமாத்தூர், சடைக்கன்பட்டி, அல்லிநகரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ரூ.15.69 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வுகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், அனைத்து தரப்பு பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.99.80 லட்சம் மதிப்பீட்டில் தெரணி முதல் புதுக்குறிச்சி வரை செல்லும் தார் தாலை, ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் மாக்காய்குளம் முதல் இரசுலாபுரம் செல்லும் தார் சாலை , ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் மாக்காய்குளம் முதல் ஜெமீன் பேரையூர் வரை தார் சாலை, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அருணகிரிமங்கலம் மயானம் முதல் இரசூலாபுரம் செல்லும் தார் சாலை, ரூ.1.07 கோடி மதிப்பீட்டில், இலுப்பைக்குடி முதல் கொட்டரை வரை தார் சாலை, ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் சாத்தனூர் குடிகாடு முதல் நத்தக்காடு செல்லும் தார் சாலை, ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் குரும்பாபாளையம் முதல் பனங்கூர் வரை செல்லும் தார் சாலை,
ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் குரும்பாபாளையம் முதல் கொட்டரை செல்லும் தார் சாலை, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் முதல் மூங்கில்பாடி வரை செல்லும் தார் சாலை, ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் மேலமாத்தூர் முதல் வரிசைப்பட்டி வரை செல்லும் தார் சாலை ஆகிய சாலைகளை பலப்படுத்தும் பணி மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஆதிதிராவிடர் தெருவில் இருந்து வரிசைப்பட்டி வரை செல்லும் மெட்டல் சாலையினை தார் சாலையாக மாற்றும் பணி…
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேலமாத்தூர் ஊராட்சி ராஜவிக்னேஷ் பள்ளி அருகில் தெற்க்குப்புறம் புதிய பேருந்து நிழற்குடை, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஊராட்சி மருதையான் கோவில் பேருந்து நிறுத்தத்தில் கிழக்குபுறம் புதிய பேருந்து நிழற்குடை,
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஊராட்சி சடைக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கிழக்குபுறம் புதிய பேருந்து நிழற்குடை, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அல்லிநகரம் ஊராட்சி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் வடக்கு மற்றும் மேற்கு புறங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி என மொத்தம் ரூ.15.68 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் ஜெமீன் பேரையூர் முதல் அருணகிரிமங்கலம் செல்லும் சாலையின் மருதையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தையும், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் ஆதிதிராவிடர் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகக் கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தமிழ்நாடு முதலமைச்சரரால் செயல்படுத்தப்படும் அரசு திட்டப்பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும், பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், அட்மா தலைவர் ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, தாசில்தார் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரராசு மதியழகன், குமார், அன்புச்செல்வன், பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், இளவரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராகவன், அகிலா ராமசாமி, ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல், சாமிதுரை, பிரபு மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.