மங்கலம்பேட்டை, ஜூலை 3: மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அருகேயுள்ள கலர்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஞானசேகர் என்பவரது மகன் வீரசேகர் (22) என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த ரங்கநாதன் மகன் வல்லரசு(24), ரமேஷ் மகன் கணேசமூர்த்தி(21), ராஜாமணி (64), ரங்கநாதன் மகன் ரகுராஜ் (40) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீரசேகரிடம் ‘நீ என்ன ஊருல பெரிய ஆளாடா’ என கேட்டு வம்பிழுத்து, அசிங்கமாக திட்டி, கத்தியால் தலையில் வெட்டி, கட்டையால் அடித்து காயப்படுத்தினர். இதில் பலத்த காயமடைந்த வீரசேகர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தாக்கிய நால்வரையும் கைது செய்தனர்.
ஆலடி அருகே இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
0