ஆலங்குளம், மே 25: ஆலங்குளம் அருகே நல்லூர் சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் முத்து செல்வம் (42). இவர் நல்லூரில் உள்ள ரைஸ் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை சம்பந்தமாக பக்கத்து ஊரான சிவலார்குளத்திற்கு பைக்கில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். சிவலார்குளம் விலக்கு பகுதியில் இருந்து நெல்லை -தென்காசி சாலையை கடந்துள்ளார். அப்போது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த கார் முத்துச்செல்வம் ஒட்டி வந்த பைக்கின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே முத்துசெல்வம் உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார், முத்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த செங்கோட்டையை சேர்ந்த விருதாலீபாபு மகன் முகமது ரியாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பரிதாப பலி
0
previous post