கறம்பக்குடி,ஆக.30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஆலங்குடி குறு வட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கறம்பக்குடி அருகே உள்ள குழந்திரான் பட்டு அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று சிறப்பித்துள்ளனர். இதில் தடகள போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான போட்டியில் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாணவன் ஹரிஹரன் 2ம் இடமும், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாணவி சாருலதா முதல் இடமும், 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2ம் இடமும், தடை தாண்டி ஓடும் பந்தயத்தில் 2ம் இடமும் மாணவி அட்சயா பெற்றார். 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 3ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான போட்டியில் 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் குழந்திரான் பட்டு அரசு உயர்நிலை பள்ளி மாணவன் பிரதீஸ் முதல் இடமும், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அதே மாணவன் முதல் இடமும், 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அதே மாணவன் 2ம் இடமும் மாணவன் நவீன் குமார், தட்டு எரிதல் போட்டியில் 3ம் இடமும், மாணவி அபர்ணா 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 3ம் இடமும், பெற்றனர். இதை தொடர்ந்து ஆலங்குடி குரு வட்ட அளவிலான போட்டியில் குழந்திரான் பட்டு அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.
ஆலங்குடி குறு வட்ட அளவிலான தடகள போட்டி: கறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
previous post