ஆலங்குடி, ஜூலை 9: ஆலங்குடி வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராம சுப்புராம் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள்கள் பன்னீர்செல்வம், தன்ராஜ், சத்தியராஜ், பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், நகர தலைவர் அரங்குளவன் நன்றி கூறினார். கறம்பக்குடி: கறம்பக்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் தலைமையில் சீனிக்கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.