புதுக்கோட்டை,ஆக.14: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மதுவிலக்கு அமலாக்க போலீசார் மற்றும் ஆலங்குடி நகர காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, இதில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது போதை பழக்கத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் உள்பட பெரும்பாலானோர் அடிமை ஆகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தற்போது ஆங்காங்கே போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழிகள் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருவதோடு தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு தீவரமாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் ஆலங்குடி காவல் துறையினர் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவ மாணவிகள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வேன் என்று போதை பழக்கத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஆலங்குடியின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தனர்.