முத்துப்பேட்டை, ஆக.13: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளியின் (பொறுப்பு) தலைமையாசிரியர் முருகானந்தம் தலைமையிலும், வட்டாரக்கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக மணிபாரதி, துணைத் தலைவராக சத்யா, முன்னாள் மாணவ உறுப்பினராக பாலாஜி, உறுப்பினர்களாக வினோதினி, ரம்யா, செல்வமணி, சரண்யா, ரஞ்சிதா, பிரியா, அமராவதி, சங்கரி, சசிகலா, சுதா, பவானி, பரமேஸ்வரி, லோகநாதன், ராதிகா, சுபத்ரா, கலைராணி, சரண்யா, சத்யா, சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பாராட்டி வட்டார கல்வி அலுவலர் ராமசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கூட்ட நிகழ்வுகளை பள்ளி ஆசிரியர்கள் சுமதி, சரிதா, மேரி விஜயராணி, பொன்மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.