தஞ்சாவூர், நவ.17: தஞ்சாவூர் ஒன்றியம் ஆலக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.49.90 லட்சம் மதிப்பிலான மாவு, மரசெக்கு, மசாலா உற்பத்தி நிலையத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டார். அப்போது நல்ல முறையில் உற்பத்தியை தொடங்குமாறு மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர், ந.வல்லுண்டான்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ.19.82 லட்சம் மதிப்பிலான பிஸ்கட், கேக் பேக்கரி தயாரிக்கும் உற்பத்தி நிலையத்தை கலெக்டர்
தீபக் ஜேக்கப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன்,வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஒன்றியகுழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி லாசர், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.