ஆர்.எஸ்.மங்கலம், செப்.4: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலக துணை வட்டாட்சியரான உதயகுமாருக்கு, ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. வட்டாட்சியர் வரதராஜன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் ஆதிலெட்சுமி, போலீசார் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து செய்து கண்காணித்தனர். அப்போது கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் ஜேசிபி மூலம் ஆற்று மணலை அள்ளி டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸ் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை பார்த்ததும் ஜேசிபி டிரைவர் மாதவனை தவிர மற்றவர்கள் தப்பி சென்றனர். சட்ட விரோதமாக ஆற்று மணலை அள்ளியதால் டிப்பர் லாரி,ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டது. துணை வட்டாட்சியர் உதயக்குமார் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசிபி டிரைவர் மாதவனை போலீசார் கைது செய்தனர்.
ஆற்றில் மணல் திருட்டு ஜேசிபி, லாரி பறிமுதல்
previous post