ஆறுமுகநேரி,அக்.25: ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 22ம் தேதி இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் எஸ்ஐ தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் ராஜா, ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வக்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களது பைக்கில் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 20 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.