ஆர்.எஸ்.மங்கலம், ஆக.22: ஆனந்தூர் அருகே ஆயங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் யூனியன் சேர்மன் ராதிகா பிரபு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துனைத் தலைவர் சேகர், வட்டாட்சியர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி, ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டி, யோகேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இத்திட்ட முகாமில் ஆய்ங்குடி, காவனக்கோட்டை, வடக்கலூர், செவ்வாபேட்டை, கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
இம்முகாமில் மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பிரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் ஆய்க்குடி ஊராட்சி தலைவர் காளியம்மாள், காவனக்கோட்டை ஊராட்சி தலைவர் பூபதி வைரவன், வடக்கலூர் ஊராட்சி தலைவர் காளியம்மாள், செவ்வாப்பேட்டை ஊராட்சி தலைவர் ஜான்சி ராணி, வடக்கலூர் ஊராட்சி தலைவர் கவிதா அசோகன், துணை வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சாத்தையா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.