சிவகங்கை, ஆக.22: ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் மாரிமுத்துஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் இணைச் செயலாளர் மீனாட்சி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அஞ்சுகம், மாநில மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
previous post