தர்மபுரி: தர்மபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டியில் பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில், நேற்று ஆர்டிஓ தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அருகே உள்ள ஆட்டுக்காரம்பட்டியில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை, கடந்த 1996ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை, அதே பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினருக்கு இலவச பட்டாவாக வழங்கியது. இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அனுமதியின்றி எடுத்ததாகவும், ஆர்ஜிதம் செய்யப்பட்ட தங்களுடைய நிலத்தை திரும்ப தரவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.