Wednesday, July 16, 2025
Home மகளிர்அழகு ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழி ப்யூட்டி பாக்ஸ் : அழகிய பாதங்களைப் பெற பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக காலில் உள்ள அழுக்குகள் நம் ரத்தத்தோடு கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்கிறோம். அதுவே எப்போதும் நல்லதும் கூட.காலுக்கு வழங்கப்படும் பெடிக்யூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்யூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.பார்லரில் பெடிக்யூர் செய்யும் முறை…குறிப்பு : கால்கள் மற்றும் பாதங்கள் தாங்கக் கூடிய அளவுக்கு வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு முறையும் கால்களைச் சுத்தம் செய்ததும் தண்ணீரை மாற்ற வேண்டும்.வீட்டில் பெடிக்யூர் செய்யும் முறை…குறிப்பு : பெடிக்யூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்யூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து  பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.* சிலவகை  நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக க்யூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் க்ளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணையை க்யூட்டிக்கல் க்ரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.* ப்யூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.பெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மை யாகத் தெரியும்.* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத் துணர்ச்சி பெறும்.* கால் வலி, உடல் வலி நீங்கும்.காலை பாதுகாக்கும் வழிமுறை* நகங்கள் இருந்தால் அழுக்கு சேரும்.* நகங்களை வளர விடாமல் அவ்வப்போது நீக்கிவிடுவது நல்லது.* நெயில் பாலிஸ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துதல் கூடாது.* வெளியில் செல்லும்போது கால் உறை அல்லது குதிகாலை   மறைக்கும் காலணிகளை பயன்படுத்தலாம்.* வெளியில் சென்று வந்ததும் கால்களை சுத்தம் செய்தல் வேண்டும்.* எப்போதுமே மென்மையான டவலால் கால்களைத் துடைக்க வேண்டும்.* சொத்தையான நகங்கள் அருகில் இருக்கும் நகத்திற்கும் பரவும். சொத்தை நகத்தை உடனே நீக்குவது நல்லது. * சொத்தை நகம் நீக்கப்பட்டால், புதிதாய் வளரும் நகங்கள் ஆரோக்யமாக வளரும்.அடுத்த இதழில்… காலுக்கு மசாஜ் (foot massage) செய்வது….எழுத்து வடிவம்: மகேஸ்வரிபடங்கள்: விஜி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi