நன்றி குங்குமம் தோழி உணவே மருந்துசூப்பர் மார்க்கெட்டுகளில் பச்சை நிறத்தில் பேரிக்காய் போன்று இருக்கும் அவகேடோ பழத்தை பார்த்திருப்பீர்கள். இதை ‘பட்டர் ஃபுரூட்’ என்றும் சொல்வதுண்டு. ஏதோ புதுசா இருக்கு என்று ஆச்சரியப்பட்டு பார்ப்பதோடு சரி, அதை யாரும் வாங்கியிருக்க மாட்டோம். ஆனால் அடுத்த முறை பார்த்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை.‘ஆய்வுகளில் அவகேடோ பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லும் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ் அவகேடோவின் அருமைகளை விளக்குகிறார்…கொழுப்பு மிகுந்துள்ள இந்த பட்டர் ஃப்ரூட் கலோரி நிறைந்தது என்று சொல்வதுண்டு. ஆனால், சமீபத்திய ஆய்வில், இதில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் கரோட்டினாய்ட்ஸ் (Carotenoids) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் கொழுப்பில் கரையக்கூடியவை என்பதால், தைரியமாக இதயம் காக்கும் அவகேடோ பழத்தை உண்ணலாம். ;சிறிதளவு அவகேடோ பழம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும் என்பதால், எடை இழப்பு முயற்சிக்கு இது நல்ல கைகொடுக்கும். காரணம் இதில் இருக்கும் ஒலீயிக் அமிலமானது (Oleic acid) மூளைக்கு வயிறு நிரம்பிய சமிக்ஞையை அனுப்பிவிடும்.அவகேடோ பழமானது, அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம்; அல்லது எச்.டி.எல் கொழுப்பு போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், அவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. இந்த நல்ல கொழுப்பு (HDL) இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கக்கூடியது என்பதால், உங்களுக்கு மாரடைப்பின் குடும்ப வரலாறு இருந்தால், உங்கள் சமையலறையில் சில பட்டர் ஃப்ரூட்ஸை எப்போதும் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.அடுத்து அவகேடோ பழம் எப்படி உங்களுடைய நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கிறதோ, அதேபோல கெட்ட கொழுப்பு அளவை குறைக்கவும் செய்கிறது. மேலே சொன்ன அதே ஒலீயிக் அமிலமானது, இதயநோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை குறைக்கும் செயலில் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்தக்கொழுப்பு அதிகம் இருப்பவர்களுக்கு அவகேடோ பழம் ஒரு போர் வீரனைப்போல பாதுகாக்கிறது.கர்ப்பிணிப்பெண்களின் தோழி என்று அவகேடோவை சொல்லலாம். பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களை, ஃபோலிக் ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்குப்பதில்; ஃபோலேட் ஊட்டச்சத்து மிகுந்துள்ள அவகேடோ பழத்தின் ஜூஸை ரெகுலராக கர்ப்பிணிப்பெண்கள் எடுத்துக் கொண்டால், ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறையால் வரக்கூடிய குறைப்பிரசவத்தை தவிர்க்க முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக எல்லோருக்குமே உடல் செல்களின் ஆரோக்கியத்திற்கு ஃபோலிக் ஆசிட் அவசியம். செல்கள் பாதிப்பு புற்றுநோய்க்கு காரணமாகிவிடும். இதனால் நாம் அனைவருமே அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.அவகேடோ பழத்தின் கெட்டியான ஓடு, பூச்சிகள் எளிதில் நெருங்காது என்பதால், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கிறது. அவகேடோவில் ஏராளமான மிகநுண்ணிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்டுகளின் அளவை அதிகரிக்கச்செய்து,புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடிய; உயிரணுக்கள் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன, அவகேடோ பழம் வாய்வழி புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயையும், வேறு சில வீரியம் மிக்க நோய்களையும் தடுக்கக்கூடும்.அவகேடோவில், வாழைப்பழத்தையும் விட பொட்டாசியம் அதிகம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் கே, வைட்டமின் பி 5 மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.; நோயெதிர்ப்பு மண்டலத்தின் பராமரிப்பிற்கு முக்கியத் தேவையான வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்ட்டிஆக்ஸிடன்ட் ஆகும்.நம்முடைய குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு போதுமான நார்ச்சத்துள்ள உணவுகள் உட்கொள்வது அவசியம். நார்ச்சத்து மிக்க அவகேடோவை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபடலாம். மேலும்,; கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.ஒரு ஆய்வின்படி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகேடோ முக்கிய பங்களிப்பதாகத் தெரிகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் குறைப்பதால், மூளை எந்தவித இடையூறும் இல்லாமல் ஊட்டமடைகிறது.; காரணம், உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் அறிவாற்றல் வீழ்ச்சியுடன் தொடர்புடையது, எனவே ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதன் மூலம், முதுமையோடு தொடர்புடைய மறதிநோய்க்குக் காரணமான மூளையின் சாம்பல் செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட் உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவுகிறது, இதிலிருக்கும் பைட்டோஸ்டெரோல்கள் (Phytosterols) குறிப்பாக ஆர்த்தரைடிஸுக்கு காரணமான அழற்சியை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்னைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்.; இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.கண்களின் பார்வை திறனை அதிகரிக்கவும், புரை வளர்தலை கட்டுப்படுத்தவும் அவகேேடா மிகவும் பயனுள்ள பழம். கண்களில் ஏற்படும் கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.இதன் விதை கூட,; மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. லுகேமியா எனப்படும் ஒரு வகை புற்றுநோயை எதிர்ப்பதற்கான ஆற்றலுள்ள ஒரு மூலப்பொருள் இதன் விதையில் உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நீரிழிவு நோயை எதிர்கொள்ளவும், உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குணப்படுத்தவும் பிற அழற்சி நிலைகளைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன.பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டி மேற்கொண்ட ஆராய்ச்சியில், விதைகளில் உள்ள பினோலிக் ஆன்டிஆக்ஸிடென்ட் கலவைகள் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றைக் குறைத்து அழற்சி நிலைமைகளைக் குறைக்கலாம் எனவும், விதைகளில் பூச்சிக்கொல்லி, பூஞ்சைக் கொல்லி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது.இதன் விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்திருப்பதால், அது செரிமான ஆரோக்கியத்திற்கும் இதய நோயாளிகளுக்கும் முக்கியமானது, ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.உயர் ஃபைபர் உணவு மலச்சிக்கலைத் தடுக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும்.உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அவகேடோ விதையில் அதிகம் உள்ளது. நல்ல முதிர்ந்த பழத்தின் விதையில்தான் பொட்டாசியம் மிகுந்திருக்கும்.பழம் மற்றும விதையில் உள்ள; அதிக “நல்ல கொழுப்பு” மற்றும் நார்ச்சத்து காரணமாக, உடல் கொழுப்பை எளிதில் இழக்க வழி வகுக்கும்.; ஒரு நாளைக்கு விதையோடு சேர்ந்த ஒரு அவகேடோ பழத்தை உண்பதன் மூலம் அதிகப்படியான பசியுணர்வை கட்டுப்படுத்த முடியும்.மகாலட்சுமி
ஆரோக்கியப் பெட்டகம் அவகேடோ
65
previous post