கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேய ராகவேந்திரர் சுவாமி கோயிலில், 353வது ஆராதனை மகோத்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், பஜனையும், ஸஹஸ்ர நாம அர்ச்சனையும், மாலை 7 மணிக்கு, ராகவேந்திரர் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இதே போல், கிருஷ்ணகிரி செந்தில் நகரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழாவையொட்டி, சுப்ரபாதம், நிர்மால்ய அபிஷேகம், வேத பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆராதனை மகோத்சவ விழா
previous post