தொண்டி, ஜூலை 4: தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டி ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் முதல் நாள் முதல் சேவை என்ற அடிப்படையில் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மரிய அருள், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சேக் மஸ்தான் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுனர் வெற்றிவேலன், கபிர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.