தொண்டி, மார்ச் 1: தொண்டி மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போதிய மருத்துவர்கள் நியமிக்க கோரி பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். போதிய மருத்துவர்களை நியமனம் செய்த தமிழக அரசிற்கு தொண்டி பேருராட்சி, தமுமுக, தொண்டி மக்கள் நலப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.