ஓசூர், செப்.17: அண்ணா பிறந்த நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவர் பூபேஷ் கார்த்திக் ஏற்பாட்டில், ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள மூக்கண்டப்பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் தளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா இணைந்து மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் வெங்கடேஷ், மாநகர நிர்வாகிகள் செந்தல்குமார், கோபி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசரெட்டி, ஒன்றிய செயலாளர் திவாகர், சுகாதார நிலைக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் சென்னீரப்பா, நாகராஜ், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கண்ணன், சந்திரன் மற்றும் மாட்ட மருத்துவர் அணி சார்ந்த நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.