தூத்துக்குடி, ஆக 4: தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடந்த இப்பயிற்சி வகுப்பை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்ததுடன், ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை கூறினார். ஓய்வுபெற்ற முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரும் தன்னார்வலர் மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சியாளருமான மரிய மைக்கேல், பயிற்சி அளித்தார். அப்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், எஸ்ஐ வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர்.
ஆயுதப்படை போலீசாரின் பேரிடர் மீட்பு பயிற்சியை எஸ்பி ஆய்வு
previous post