மதுரை, ஆக. 3: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் எஸ்.ஐ சேதுராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, கையில் வாளுடன் நின்றிருந்த நபர் சிக்கினார். விசாரணையில் அவர் எம்.கே.புரம் மணிவண்ணன் (46) என்பதும், இவர் கடந்த ஆண்டு திமுக பிரமுகர் ஒருவரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஜாமீனில் வந்துள்ள அவர் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி ஆயுதம் வைத்திருந்ததாகதெரிவித்தார். வாளை பறிமுதல் செய்த போலீசர், வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர். இதேபோல, கூடல்புதூர் போலீசார் பி.எஸ்.என்.எல். ரவுண்டானா அருகே ரோந்து சென்றபோது டூவீலரில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயன்றனர். போலீசார் விரட்டியதில் ஒருவர் சிக்கினார். அவர் வைத்திருந்த பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஆனையூர் முத்து நகரை சேர்ந்த ஆனந்த் மகன் கிருபாஸ்டின்(22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய அவரது நண்பரை தேடிவருகின்றனர்.
ஆயுதங்களுடன் 2 பேர் கைது
previous post