மதுரை, ஆக. 28: மதுரை கூடல் புதூர் போலீசார் கரிசல்குளம் கண்மாய்க்குள் ரோந்து சென்றபோது கருப்பசாமி கோவில் அருகே முட்புதருக்குள் கும்பல் ஒன்று பதுங்கி இருந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் கத்தி, நீண்ட வாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இவர்கள், கூடல் புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வெற்றிவேல்(27), சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்குளம் முத்துவேல் என்ற மண்டு(29), கூடல் புதூர் மேட்டு தெரு தெய்வேந்திரன் நகர் கருப்புசாமி(25) என்று தெரிய வந்தது. அவர்கள் அப்பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பொருட்களை விற்பனை செய்தும், அந்த பணத்தில் ஜாலியாக இருந்தும் வந்ததும் தெரிந்தது. மேலும் அந்த வழியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.